தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
புதிய வழிகாட்டும் திட்டத்தின் மூலம் 150 மாணவர்கள் பலன்

வேலை செய்துகொண்டே பயில கூடுதல் ‘ஐடிஇ’ மாணவர்களுக்கு ஊக்கம்

2 mins read
4eba00de-3386-4d99-a5fc-08a233428343
வேலை செய்துகொண்டே பட்டயக் கல்வி பயில்வதற்கு உதவும் புதிய வழிகாட்டும் திட்டத்தை ஐடிஇ காலேஜ் ஈஸ்ட்டில் அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்துக் கல்வி மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி பேசினார் (ஆகஸ்ட் 12). - படம்: சாவ்பாவ்

தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) மாணவர்களில் அதிகமானோரை வேலை செய்துகொண்டே பட்டயக் கல்வி பயில்வதற்குப் புதிய வழிகாட்டும் திட்டமொன்று ஊக்குவிக்கிறது.

மாணவர்கள் பட்டயக் கல்வி பயில்வதற்கு வழிகாட்டிகள் ஆலோசனைகளை வழங்குவர்.

கல்விக் கழகத்தின் முதல் முயற்சியான அத்தகைய வழிகாட்டும் திட்டம் ‘ஜம்ப்ஸ்டார்ட்’ (JumpStart) என்று அழைக்கப்படுகிறது.

லாப நோக்கமற்ற ‘குவான்ட்எட்ஜ் அறநிறுவனம் சிங்கப்பூர்’ அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு நிதியாதரவு அளிக்கும். ‘தி எஸ்ட்ரோனாட்ஸ் கலெக்ட்டிவ்’ எனும் இளையர் அமைப்பும் திட்டத்தில் இணைந்துகொண்டுள்ளது.

நிச்சயமற்ற பொருளியல் சூழல் நிலவும் வேளையில் முக்கியமான கட்டத்தில் திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதாகக் கல்வி மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறினார்.

“அதிகரித்துவரும் பதற்றமும் தொழில்நுட்ப உருமாற்றங்களும் வேலைகள், தொழில்துறைகள், வேலை செய்யும் முறை முதலியவற்றை மாற்றியமைக்கின்றன,” என்றார் அவர்.   

தொழில்நுட்பக் கல்விக் கழகமும் இரண்டு பங்காளித்துவ அமைப்புகளும் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்ட நிகழ்வில் டாக்டர் ஜனில் பேசினார். ‘ஐடிஇ’ கிழக்குக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற்ற வோர்ல்ட்எக்ஸ் (WorldX) நிகழ்ச்சியில் ஏறக்குறைய 300 மாணவர்கள் பங்கேற்றனர்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சருமான டாக்டர் ஜனில், எதிர்பார்ப்புக்கு ஏற்ற வேலைகளைப் பெறுவதில் உள்ள சவால்கள் மாணவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தக்கூடும் என்றார். ஆயினும் கல்வி அமைச்சு வேலை நிலவரத்தை அணுக்கமாய்க் கண்காணித்து வருவதாக அவர் சொன்னார்.

வழிகாட்டும் திட்டம் இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இதுவரை அது மூன்று தொழில்நுட்பக் கல்விக் கழகங்களிலும் 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதாகக் கூறப்பட்டது. ஆண்டிறுதிக்குள் மேலும் 100 மாணவர்களுக்கு உதவ அது எண்ணியுள்ளது.

குறிப்புச் சொற்கள்