தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செப்டம்பர் 9 முதல் 14 வரை எல்லைகளில் மேம்படுத்தப்பட்ட சோதனை

1 mins read
e3e63b63-e3e1-4ef2-83a9-49c071af69bc
மேம்படுத்தப்பட்ட சோதனை நில, ஆகாய, கடல் எல்லைகள் அனைத்துக்குமூ பொருந்தும். - கோப்புப் படம்: சாவ்பாவ்

செப்டம்பர் ஒன்பதிலிருந்து 14ஆம் தேதி வரை சிங்கப்பூருக்கு வருகை தரும் பயணிகள் மேம்படுத்தப்பட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்று குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணையம் அறிவித்துள்ளது.

“இந்த வட்டாரத்தில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, செப்டம்பர் ஒன்பதிலிருந்து 14ஆம் தேதிவரை நில, ஆகாய, கடல் எல்லைகள்வழி வரும் பயணிகளுக்குக் குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணையம் மேம்படுத்தப்பட்ட சோதனையை மேற்கொள்ளும்,” என்று குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணையம் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 8) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

மேம்படுத்தப்பட்ட சோதனைகளால் எல்லைகளைக் கடக்கக் கூடுதல் நேரம் ஆகலாம் என்பதைக் கருத்தில்கொள்ளுமாறு பயணிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க மதகுருவான போப்பாண்டவர் ஃபிரான்சிஸ், புதன்கிழமையிலிருந்து (செப்டம்பர் 11) வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) வரை சிங்கப்பூருக்கு சமயம் தொடர்பான பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர், இந்தோனீசியா, பாப்புவா நியூ கினி, தீமோர்-லெஸ்தே போன்ற நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள 12 நாள் பயணத்தின் கடைசி அங்கமாக சிங்கப்பூர் வரவுள்ளார்.

87 வயது போப் ஃபிரான்சிஸ், சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் சுமார் 50,000 கத்தோலிக்கர்களுடன் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவார். அவர் சிங்கப்பூர் அரசியல் தலைவர்களைச் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்