மலேசியாவில் எஸ்கவேட்டர்-கார் விபத்து: சிங்கப்பூரர் உட்பட அறுவருக்குக் காயம்

1 mins read
11ef36e4-080c-46b3-94b6-38632e3457ee
விபத்து ஈப்போ நகரில் நிகழ்ந்தது. - படம்: தி ஸ்டார் / ஏ‌ஷியா நியூஸ் நெட்வோர்க்

ஈப்போ: மலேசியாவின் ஈப்போ நகரில் எக்ஸ்கவேட்டர் வாகனமும் காரும் விபத்துக்குள்ளாயின.

சிங்கப்பூரர் ஒருவர் உட்பட அறுவர் காயமுற்றனர்.

இச்சம்பவம் ஈப்போ கார்டன் சவுத்துக்கு அருகே உள்ள ஜாலான் டெ லியென் சுவீயில் நிகழ்ந்தது. சனிக்கிழமை (டிசம்பர் 27) காலை 11.34 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக பேராக் தீயணைப்பு, மீட்புப் பிரிவின் தற்காலிகத் துணை இயக்குநர் ‌ஷாஸ்லீன் முகம்மது ஹனாஃபியா தெரிவித்தார்.

ஈப்போ தீயணைப்பு, மீட்புப் பிரிவின் தீயணைப்பு வாகனம் ஒன்று ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்துக்குச் சென்றது. அப்போது ஒரு காரும் எக்ஸ்கவேட்டர் வாகனமும் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.

“மொத்தம் அறுவர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் நால்வர் பெரியவர்கள், இருவர் சிறார்,” என்று திரு ‌ஷாஸ்லீன் முகம்மது ஹனாஃபியா சனிக்கிழமை அறிக்கையில் தெரிவித்தார்.

“காயமுற்றோரில் பெண் ஒருவர் வாகனத்தின் முன், பின் இருக்கைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். இதர ஐவர் லேசான காயங்களுக்கு ஆளாயினர்,” என்று அவர் குறிப்பிட்டார். சிக்கிக்கொண்ட பெண்ணை மீடகத் தீயணைப்பாளர்கள் நோயாளிகளைத் தூக்கிச் செல்ல உபயோகிக்கப்படும் ஸ்ட்ரெட்சர்களைப் (stretcher) பய்னடுத்தினர்.

காயமடைந்த அறுவரும் சிகிச்சைக்காக மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்