சிங்கப்பூரில் உள்ள சில ‘கோ-கார்ட்’ (Go-Kart) நிறுவனங்கள் செயல்பாட்டு உரிமத்துக்கு விண்ணப்பம் செய்வதிலிருந்து விலக்கு பெற்றுள்ளன.
மணிக்கு ஆறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் மின்கலனில் செயல்படும் கோ-கார்ட் வண்டிகளுக்கு அந்த விதிவிலக்கு பொருந்தும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் அறிவித்தது.
தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் போக்குவரத்து அமைச்சில் இருந்தபோது மின்கலனில் செயல்படும் கோ-கார்ட் வண்டிகள் குறித்து கேள்வி எழுந்ததைக் குறிப்பிட்டார்.
கடைத்தொகுதிகளில் பிள்ளைகளுக்காக மின்கலனில் செயல்படும் கோ-கார்ட் வண்டிகள் பெரியளவில் ஆபத்தானவை அல்ல என திரு சீ சொன்னார்.
“பாதுகாப்புக்குத் தொடர்ந்து முன்னுரிமை கொடுக்கிறோம். ஆனால், மணிக்கு ஆறு கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் வண்டிகளை ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வண்டிகளுடன் ஒப்பிட முடியாது,” என்றார் திரு சீ.
மின்கலனில் ஓடும் கோ கார்ட் வண்டிகளுக்கான ஒப்புதலைத் தள்ளுபடி செய்யும்போது அவற்றை நடத்தும் நிறுவனங்களுக்குப் பாதுகாப்பை வலுப்படுத்தும் மாற்று வழிகளை யோசிக்க கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்று திரு சீ குறிப்பிட்டார்.

