சிங்கப்பூரில் வரும் நாள்களில் அதிக மழையை எதிர்பார்க்கலாம்

சிங்கப்பூரில் வரும் நாள்களில் அதிக மழையை எதிர்பார்க்கலாம்

1 mins read
519a1dc2-2d84-4eec-8dc0-8e867713f67a
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் மே மாதத்தின் இரண்டாம் பாதியில் அதிக மழையை எதிர்பார்க்கலாம் என்று தேசிய வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

வெப்பநிலையும் குறையும் என்று அது குறிப்பிட்டது.

இம்மாதத் தொடக்கம் முதல் சிங்கப்பூரில் வெப்பநிலை சற்று கடுமையாக இருந்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெப்பநிலை 37 டிகிரி செல்சியசைத் தொட்டது.

சிங்கப்பூரில் அடுத்த இரு வாரங்களுக்கு காலை நேரங்களில் இடியுடன் கூடிய மழையையும், அதிகமான காற்றையும் எதிர்பார்க்கலாம்.

சில நேரங்களில் தீவின் பல்வேறு இடங்களில் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பெரும்பாலான நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியசுக்கு இடையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்