தீபாவளிக்கு முந்திய நாள் கூடுதல் பேருந்து, ரயில் சேவைகள் நீட்டிப்பு

2 mins read
04ee0de5-90b0-4c2d-92e5-48d2fed3b3c3
பெருவிரைவு ரயில்கள் தீபாவளிக்கு முந்திய நாள் வழக்கத்தைவிடக் கூடுதல் நேரம் இயங்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தீபாவளிக்கு முந்திய நாள் கூடுதல் பேருந்து, ரயில் சேவைகள் நீட்டிக்கப்படவிருக்கின்றன.

வடகிழக்கு (NEL), டௌன்டவுன் (DTL), செங்காங் பொங்கோல் எல்ஆர்டி தடங்களைப் பயன்படுத்தும் பயணிகளுக்காக ரயில்களின் சேவை நேரம் வழக்கத்தைவிட நீட்டிக்கப்படவிருக்கிறது.

17 பேருந்துச் சேவைகளும் அன்றிரவு நீட்டிக்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

வடகிழக்குத் தடத்தில் ஹார்பர் ஃபிரன்ட் நிலையத்திலிருந்து கடைசி ரயில் பின்னிரவு 12.30க்குப் புறப்படும். பொங்கோல் கோஸ்ட் நிலையத்திலிருந்து நள்ளிரவு 12 மணிக்கு இறுதி ரயில் கிளம்பும். டௌன்டவுன் தடத்தில் புக்கிட் பாஞ்சாங்கிலிருந்து பின்னிரவு 12.03க்கும் எக்ஸ்போ நிலையத்திலிருந்து பின்னிரவு 12.04க்கும் கடைசி ரயில் புறப்படும்.

செங்காங் இலகு ரயில் தடத்தில் இறுதி ரயில் பின்னிரவு 1.06க்கும் பொங்கோலைப் பொறுத்தவரை கடைசி இலகு ரயில் பின்னிரவு 1.09க்கும் கிளம்பும்.

ரயில் சேவைகளுடன் 17 எஸ்பிஎஸ் பேருந்துச் சேவைகளும் நீட்டிக்கப்படுகின்றன.

அவை: 60ஏ (60A), 63எம் (60M), 114ஏ (114A), 222, 225ஜி (225G), 228, 229, 232, 238, 291, 292, 293, 315, 325, 410டபிள்யு (410W), 804 and 812.

எஸ்எம்ஆர்டி நிறுவனமும் அதன் பேருந்து, ரயில் சேவைகளின் நேரத்தைத் தீபாவளிக்கு முதல் நாள் நீட்டிக்கப்போவதாக அக்டோபர் 6ஆம் தேதி அறிவித்தது.

மேல் விவரம் பெற விரும்புவோர் எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் அவசரத்தொலைபேசி எண்ணைக் காலை 7.30 மணியிலிருந்து இரவு 8 மணிவரை அழைக்கலாம். தொலைபேசி எண்: 1800-287-2727

இணையப்பக்க முகவரி: www.sbstransit.com.sg

குறிப்புச் சொற்கள்