‘கான் மம்’ மூதாட்டியின் விசாரணைக் காவல் நீட்டிப்பு

1 mins read
ea52fe04-d1eb-41ce-a4a1-80303a137f1f
பிரிட்டிஷ் நாட்டவரான டியோன் மெரி ஹான்னா மீது ஏப்ரல் 5ல் மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவாகின. - படம்: யூடியூப்

நெட்ஃபிளிக்சில் வெளிவந்த ‘கான் மம்’ எனும் ஆவணப்படத்தில் வரும் முக்கிய கதாமாந்தரான 84 வயது டியோன் மேரி ஹான்னா, சிங்கப்பூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் நாட்டவரான ஹான்னா மீது ஏப்ரல் 5ல் மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவாகின.

இந்நிலையில், அவர் மேலும் ஒரு வாரத்துக்கு விசாரணைக் காவலில் வைக்கப்படுவார் என்று அரசாங்க தரப்பு வழக்கறிஞர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) தெரிவித்தனர்.

ஏப்ரல் 10ஆம் தேதியன்று ஹான்னா மருத்துவமனையிலிருந்து திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

மத்தியக் காவல்துறைப் பிரிவின் தலைமையகத்தில் அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

காணொளி மூலம் அவர் ஏப்ரல் 11ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஹான்னா மார்ச் 28ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

போலி முதலீட்டு வாய்ப்புகள், சொத்து உரிமை ஆகியவற்றைத் தருவதாக ஹான்னா தங்களிடம் பொய் கூறியதாகக் காவல்துறையிடம் பலர் புகார் செய்ததை அடுத்து, ஹான்னாவுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

நெட்ஃபிளிக்சில் அண்மையில் வெளியவந்த ‘கான் மம்’ ஆவணப்படம் ஹான்னாவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

தாம் பெற்ற மகனின் வாழ்வில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நுழைந்து அவரிடமிருந்து அவர் 300,000 பவுண்டு (S$520,000) ஏமாற்றியது அதில் காட்டப்பட்டது.

கடைகளில் பொருள்கள் திருடியது, மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக பிரிட்டனில் அவர் சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்று அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்