ஃபேர்பிரைஸ் பேரங்காடி $4,000 தருவதாகக் கூறும் போலி இணைய கேள்வி-பதில் விளம்பரம் குறி்த்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அந்தப் போலி கேள்வி- பதிவ் வாட்ஸ்அப்பில் பரவுவதாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ஃபேர்பிரைஸ் குறிப்பிட்டுள்ளது.
அந்தக் கேள்வி பதிலுக்கும் ஃபேர்பிரைசுக்கும் தொடர்பில்லை என்றும் ஃபேர்பிரைஸ் அதனை அங்கீகரிக்கவில்லை என்றும் அது எச்சரித்தது.
அதைப் பெற்ற எவரும் இணைப்புக்குள் நுழைவதையும் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்று அது கூறியது.
அந்தப் போலி கேள்வி-பதிலை நிறைவு செய்வோருக்கு ரொக்க வெகுமதி உறுதியளிக்கிறது. இது தனிப்பட்ட தகவல்களைப் பெற மோசடிக்காரர்களால் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான தந்திரம்.
ஃபேர்பிரைசின் அனைத்து அதிகாரபூர்வ விளம்பரங்களும் சலுகைகளும் ஃபேர்பிரைஸ் குழும செயலி அல்லது அதன் அதிகாரபூர்வ இணையத்தளம் மூலமே வெளியிடப்படும் அது வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டியது.
“பயனர் பெயர், கடவுச் சொல் அல்லது நிதித் தகவல்களைக் கேட்டு ஃபேர்பிரைஸ் ஒருபோதும் வாட்ஸ்அப் அல்லது வேறு செய்திகளை அனுப்பாது,” என்று அது மேலும் கூறியது.
சந்தேகத்திற்குரிய தகவல்களைப் பெறுவோர் ஃபேர்பிரைசில் வாடிக்கையாளர் சேவை அவசரத் தொலைபேசி எண் 6380-5858 உடன் அல்லது general\.feedback\@fairprice\.com\.sg\. என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
அதிகாரபூர்வ ஃபேர்பிரைசின் சமூக ஊடகத் தளங்களிலும் தகவல்களைப் பெறலாம்.
உண்மையாக இருக்க முடியாத அளவுக்கு அதிகளவு சலுகைகள் குறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அது கூறியது.