பாய லேபார் ஆகாயப் படை முகாமுக்கு எதிராக விடுக்கப்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்; விசாரணை நடைபெறுகிறது

பாய லேபார் ஆகாயப் படை முகாமுக்கு எதிராக விடுக்கப்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்; விசாரணை நடைபெறுகிறது

1 mins read
f551d82a-fa2a-42c4-aeab-b59de0034f74
பாய லேபார் ஆகாயப் படை முகாமில் வெடிகுண்டு அபாயம் ஏதுமில்லை என்று உறுதி செய்யப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. - படம்: சாவ்பாவ்

பாய லேபார் ஆகாயப் படை முகாமுக்கு எதிராக விடுக்கப்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அதுகுறித்த விசாரணை நடைபெறுகிறது.

அந்த மிரட்டல் இணையம் வழி விடுக்கப்பட்டது.

அது போலி வெடிகுண்டு மிரட்டல் என்று பிறகு உறுதி செய்யப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படைக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) தெரியவந்ததாகத் தற்காப்பு அமைச்சு கூறியது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஆகாயப் படை முகாமில் சோதனையிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வெடிகுண்டு அபாயம் ஏதுமில்லை என்று உறுதி செய்யப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

போலி வெடிகுண்டு மிரட்டல் Reddit sub-forum தளத்தில் தேசிய சேவை தொடர்பான பகுதியில் பதிவு செய்யப்பட்டது.

குறிப்பிட்ட நேரம், தேதியில் குண்டு வெடிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆகாயப் படை முகாமில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களும் உயர் அதிகாரிகளின் பெயர்களும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அந்தப் பதிவு அகற்றப்பட்டுள்ளது.

போலி வெடிகுண்டு மிரட்டல் வெடிக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $50,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்