‘கெயின் சிட்டி’ மீது போலியான கூகல் விமர்சனங்கள்

‘கெயின் சிட்டி’ மீது போலியான கூகல் விமர்சனங்கள்

1 mins read
3b9e4741-9229-4c2a-aaba-dc60dd70f8b5
போலியான விமர்சனங்களை நீக்க உதவிசெய்யக் குறுஞ்செய்திகளும் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து இது ஒரு மோசடி செயலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. - படம்: கெயின் சிட்டி

மின்சாதனங்களை விற்பனை செய்யும் ‘கெயின் சிட்டி’மீது கடந்த இரண்டு வாரங்களாகப் போலியான கூகல் விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

போலியான விமர்சனங்களை நீக்க உதவிசெய்யக் குறுஞ்செய்திகளும் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து இது ஒரு மோசடி செயலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மோசடி குறுஞ்செய்திகள் ‘கெயின் சிட்டி’ ஊழியர்களின் கைப்பேசிக்கு அனுப்பப்பட்டுள்ளது. விமர்சனங்களை நீக்க உதவினால் பணம் கொடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுமாதிரியான மோசடி குறுஞ்செய்திகள் ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்து வருவதாக ‘கெயின் சிட்டி’யின் பேச்சாளர் தெரிவித்தார்.

“இதற்கு முன் எதிர்மறையான விமர்சனங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் அது உண்மையாக இருக்கும். இப்போது பதிவாகும் விமர்சனங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. குறிப்பாக ஒரு நட்சத்திர விமர்சனங்கள்மீது சந்தேகம் உள்ளது,” என்று பேச்சாளர் கூறினார்.

நிறுவனத்தின் கூகல் தளத்தில் பல ஒரு நட்சத்திர விமர்சனங்களைப் பார்க்க முடிந்தது. ஆனால் அதில் எந்தக் கருத்துகளும் பதிவிடப்படவில்லை.

“உண்மையான விமர்சனங்களில் வாடிக்கையாளர்கள் பொருள்கள் குறித்தோ கடையின் அனுபவம், சேவை குறித்தோ பதிவிடுவார்கள்,” என்று பேச்சாளர் குறிப்பிட்டார்.

மோசடி குறுஞ்செய்தி அனுப்பியவர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை.

சுங்கை காடூட், அங் மோ கியோ, மரினா ஸ்குவேர், ஐஎம்எம், தெம்பனிஸ் 1 ஆகிய இடங்களில் உள்ள ‘கெயின் சிட்டி’ யின் கடைகள் போலி விமர்சனங்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

குறுஞ்செய்தி தொடர்பாகக் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாக ‘கெயின் சிட்டி’யின் பேச்சாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்