பலதுறை மருந்தகக் குழுமத்திலிருந்து வருவது போல் தெரியும் போலி குறுந்தகவல்கள்

பலதுறை மருந்தகக் குழுமத்திலிருந்து வருவது போல் தெரியும் போலி குறுந்தகவல்கள்

படம்: சிங்ஹெல்த் பலதுறை மருந்தகக் குழுமம் / ஃபேஸ்புக்

12 Nov 2026 - 9:50 am

1 mins read

செலுத்தப்படாத கட்டணம் இருப்பதாக சிங்ஹெல்த் பலதுறை மருந்தகக் குழுமத்திடமிருந்து கறுந்தகவல் வந்தால் அது போலியானதாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய குறுந்தகவல்கள் ஹெல்த்ஹப், ஹெல்த் படி செயலிகள் அல்லது சிங்ஹெல்த் அழைப்பு நிலையம் போன்ற உண்மையான தளங்களை அடையாளம் காட்டி நம்பகமானவையாகத் தென்படக்கூடும் என்று சிங்ஹெல்த் பலதுறை மருந்தகக் குழுமம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தது. அதேவேளை, அத்தகைய குறுந்தகவல்களில் போலி இணைய முகவரிகள் இடம்பெறும் என்றும் அது தெரிவித்தது.

அதிகாரபூர்வத் தொடர்புகள், அனுமதி உள்ள தளங்களின்வழிதான் அனுப்பப்படும் என்று அது குறிப்பிட்டது. சிங்ஹெல்த் எனும் அடையாளத்துடன் அனுப்பப்படும் குறுந்தகவல்களைச் சரிபார்த்துக்குக்கொள்ளுமாறும் அது மக்களைக் கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்