ஜிஎஸ் ஹோல்டிங்சின் முன்னாள் தலைமை நிர்வாகிமீது போலி வர்த்தகக் குற்றச்சாட்டு

ஜிஎஸ் ஹோல்டிங்சின் முன்னாள் தலைமை நிர்வாகிமீது போலி வர்த்தகக் குற்றச்சாட்டு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

04 Nov 2026 - 3:19 pm

1 mins read

சிங்கப்பூரில் உள்ள பல உணவுக் கடைகளையும் உணவு நிலையங்களையும் நடத்திவரும் நிறுவனமும், பங்குச் சந்தைப் பட்டியலில் இடம்பிடித்ததுமான ஜிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, பங்கு விலையில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து 2024ஆம் ஆண்டு விலகிய 68 வயது பாங் போக், சிங்கப்பூர் பங்குச் சந்தையின் ‘கேட்டலிஸ்ட்’ தளத்தில் வர்த்தகம் செய்யப்பட்ட ஜிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனப் பங்கு விலை குறித்த போலியான தோற்றத்தை ஏற்படுத்த 60 வயது சோங் ஃபாட், 62 வயது கோ கிம் செங் ஆகிய இருவருடன் இணைந்து சதி செய்ததாகக் கூறப்படுகிறது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த மூவரும் 2022ஆம் ஆண்டு ஜனவரிக்கும் 2023ஆம் ஆண்டு அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில், நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் மூன்று வர்த்தகக் கணக்குகளைப் பயன்படுத்தி, பங்கு விலையைச் செயற்கையாக உயர்த்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாங்கும் சோங்கும் அந்த வர்த்தகங்கள் தொடர்பான குறுஞ்செய்திகளை அழித்ததன் மூலம் நீதிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டையும் எதிர்கொள்கின்றனர்.

புதன்கிழமை (நவம்பர் 4) நடைபெற்ற விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் தங்கள் தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை.

பாங்கின் பிணைத் தொகை $120,000ஆகவும் சோங்கின் பிணைத் தொகை $40,000ஆகவும் கோவின் பிணைத் தொகை $30,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்