தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெம் கடைத்தொகுதியில் உள்ளூர்ப் பண்ணைகளின் சந்தை

2 mins read
20c0b9e8-5816-44cf-bdc2-f4780322a97b
ஜெம் கடைத்தொகுதியில் வார இறுதியில் வரவிருக்கும் ஃபார்மர்ஸ் மார்க்கெட் திட்டத்தில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருள்களை வருகையாளர்கள் ஒரு கை பார்க்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இம்மாதம் 2ஆம், 3ஆம் தேதிகளில் ஜெம் கடைத்தொகுதியில் உள்ள ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா கிளைக்குச் செல்வோர் உள்ளூர்ப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட 60க்கும் அதிகமான உணவுப் பொருள்களை வாங்க முடியும்.

சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் அதேவேளை உள்ளூர்ப் பண்ணைகளை ஆதரிக்க ஃபேர்பிரைஸ் குழுமம் ‘மேட் இன் சிங்கப்பூர் ஃபார்மர்ஸ் மார்க்கெட்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

“சிங்கப்பூரின் உணவு மீள்திறனில் உள்ளூர் உற்பத்தியாளர்களும் விநியோகிப்பாளர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்,” என்று ஃபேர்பிரைஸ் குழுமப் பேச்சாளர் சொன்னார்.

2023ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் உள்ளூர் உற்பத்திக்கான தேவை 10 விழுக்காடு அதிகரித்ததாக ஃபேர்பிரைஸ் குழுமம் குறிப்பிட்டது.

ஃபார்மர்ஸ் மார்க்கெட் போன்ற திட்டம் மூலம் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் குறித்த விழிப்புணர்வைக் குழுமம் அதிகரிக்க முற்படுகிறது.

ஜெம் கடைத்தொகுதியில் உள்ள திட்டம், ‘த ஃபி‌ஷ் ஃபார்மர்’, ‘சியஸ்’ முட்டைகள், யீலி பண்ணை, கிரீன் ஹார்வஸ்ட் உள்ளிட்ட ஆறு உள்ளூர்ப் பண்ணைகளை முன்னிலைப்படுத்துகிறது.

வருகையாளர்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட உணவுப் பொருள்களைச் சுவைக்கவும் வாய்ப்பு கிடைக்கும். உள்ளூர் உற்பத்தியின் நன்மைகள் பற்றியும் சிங்கப்பூர் உணவுப் பாதுகாப்பில் அவை ஆற்றும் பங்கு பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்வர்.

மேலும் சமையல் குறிப்புகளும் பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும்.

ஃபேர்பிரைஸ் குழுமம் கிட்டத்தட்ட உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட 180 பொருள்களை அதன் கிளைகளில் விற்பனை செய்கிறது.

அவற்றுள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகள், ரெட் ஸ்னேப்பர், சீபாஸ் போன்ற மீன் வகைகள், முளைகட்டிய பயிர் போன்றவை அடங்கும்.

உள்ளூர்ச் சந்தையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்வது ஒரு சவாலாக இருந்துவருவதைப் பண்ணை உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.

சிங்கப்பூர் 2030ஆம் ஆண்டுக்குள் அதன் உணவுத் தேவைகளில் 30 விழுக்காட்டை உள்ளூரில் உற்பத்தி செய்ய இலக்கு கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்