தொடக்கக் கல்லூரி அனுமதிக்கு குறைவான பாடங்கள் உதவும்: பெற்றோர், மாணவர்கள்

தொடக்கக் கல்லூரி அனுமதிக்கு குறைவான பாடங்கள் உதவும்: பெற்றோர், மாணவர்கள்

2 mins read
b3472e62-5e12-49b8-9483-004242c0fc38
பாடங்களைத் தேர்வு செய்வதில் மாணவர்கள் கூடுதல் நீக்குப்போக்குத் தன்மையைப் பெறுவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொடக்கக் கல்லூரி அனுமதிக்கு தேவைப்படும் பாடங்களில் ஒன்றைக் குறைத்தால் அது மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை ஒருவிதத்தில் குறைக்கும்.

அத்துடன், மாணவர்கள் தங்கள் மற்ற விருப்பங்களில் கவனம் செலுத்துவதுடன் அவர்கள் உடல்நலனிலும் அக்கறை எடுத்துச் செயல்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (மார்ச் 6) கல்வி அமைச்சர் அறிவித்த மாற்றங்கள் குறித்து பெற்றோர், மாணவர்கள் சிலர் மேற்கண்டவாறு கருத்துரைத்தனர்.

கல்வி அமைச்சர் அறிவித்த மாற்றங்கள் தங்களுக்கு கூடுதல் நீக்குப்போக்குத் தன்மையை அளிக்கும் என மாணவர்கள் கூறினர். அதேசமயம், இதனால் பாடங்களைத் தேர்வு செய்வது தொடர்பாக ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மேற்கூறிய மாற்றங்களை வியாழக்கிழமை அறிவித்த கல்வி அமைச்சர் சான் சுன் சிங், 2028ஆம் ஆண்டு தொடங்கி, தொடக்கக் கல்லூரி அனுமதி பெற மாணவர்கள், தற்போதிருக்கும் ஆறு பாடங்களுக்குப் பதில் ஐந்து பாடங்களைக் குறிப்பிட்டால் போதுமானது என்று கூறினார்.

ஒரு மொழியுடன் மாணவர்கள் மேற்கொண்டு நான்கு பாடங்களைத் தேர்வு செய்து மொத்தம் உள்ள ஐந்து பாடங்களுக்கு 16 அல்லது அதற்கும் குறைவான புள்ளிகள் பெற்றிருந்தால் போதுமானது என்று அமைச்சர் விளக்கினார். தற்போதைய நிலையில் அது ஆறு பாடங்களில் 20 அல்லது அதற்கும் குறைவான புள்ளிகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது நினைவுகூரத்தக்கது.

இந்த மாற்றங்களைத் தொடர்ந்து தற்பொழுது உயர்நிலை ஒன்று, இரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் தாங்கள் எந்தெந்த பாடங்களை எடுத்துப் பயிலலாம் என்பது குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த மாற்றம் மன அழுத்தத்தை குறைக்க உதவுமா என்பதில் அவர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுவதாக கூறப்படுகிறது.

இது பற்றிக் கருத்துரைத்த புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 13 வயது ஸாக்கி ஸுல்கிஃப்லி, “பிஎஸ்எல்இ தேர்வில் என்னால் சரியாகச் செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் அப்பொழுது நான்கு பாடங்கள்தான் இருந்தன,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்