செந்தோசா கோவில் உள்ள வீட்டில் தீ

செந்தோசா கோவில் உள்ள வீட்டில் தீ

1 mins read
3d4b6e91-26ff-4476-8afc-6f51d3fb064f
படம்: அட்மென் லிம் -

செந்தோசா கோவில் உள்ள ஒரு வீட்டில் தீச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் கார் நிறுத்தும் இடத்தில் தீ ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மின்வாகனக் கார் மின்னூட்டம் செய்துகொண்டிருந்தபோது அது தீப்பிடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குடிமைத் தற்காப்புப் படையிடம் தகவல் கேட்டது.

அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், வெள்ளிக்கிழமை (மே 12) மாலை 6:50 மணி போல், 2 கோவ் வேயில் தீச்சம்பவம் ஏற்பட்டதாகத் தகவல் வந்தது. அதன் பின்னர் அங்கு விரைந்ததாக தெரிவித்தனர்.

இரண்டு நீர்பீய்ச்சிகள் கொண்டு தீயணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வீட்டில் இருந்த இருவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயமில்லை.

தீ மின்வாகனக் காரில் இருந்து வந்ததாகவும் அது பின்னர் அருகில் நின்றுகொண்டிருந்த மற்றொரு சொகுசுக் கார் மீது பரவியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாக ‌ஷின் மின் நாளிதழ் குறிப்பிட்டது.

அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்