ஹொங் லிம் உணவு நிலையத்தில் தீச்சம்பவம்

1 mins read
6957c03a-54a9-49c3-b50d-90b2d07c1f46
பாதுகாப்பு கருதிப் பாதிக்கப்பட்ட இரண்டாம் தளத்தில் காவல்துறையின் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹொங் லிம் சந்தை மற்றும் உணவு நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) மதிய உணவு நேரத்தின்போது தீச்சம்பவம் ஏற்பட்டது.

தீச்சம்பவம் குறித்து தங்களுக்குப் பிற்பகல் 12.40 மணிவாக்கில் தகவல் வந்ததாகவும் அதன் பின்னர் அங்கு விரைந்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து நால்வர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

“பாதிக்கப்பட்ட பகுதியின் இரண்டாவது தளத்தில் உள்ள சமையல் அறையில் தீச்சம்பவம் ஏற்பட்டது. நீரைப் பீய்ச்சியடித்து தீ அணைக்கப்பட்டது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பான படங்கள் சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டிருந்தன.

ஒரு படத்தில் உணவு நிலையத்தின் வளாகத்தில் உள்ள மேற்கூரை ஒன்றில் புகை வருவதைப் பார்க்க முடிந்தது. அந்தப் படத்தை பிற்பகல் 12.40 மணிவாக்கில் எடுக்கப்பட்டதாகச் சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

அதேபோல் மற்ற சில படங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதையும் பார்க்க முடிந்தது.

பாதுகாப்பு கருதிப் பாதிக்கப்பட்ட இரண்டாம் தளத்தில் காவல்துறையின் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

தீ எதனால் ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்