ஜூ சியாட் வட்டாரத்தில் உள்ள ஒற்றை மாடி தரைவீடுகளில் புதன்கிழமை (டிசம்பர் 17) தீ மூண்டது.
புகையை நுகர்ந்த காரணத்தினால் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிக்கு ரோட்டில் ஒற்றை மாடி மூன்று தரைவீடுகளில் மூண்ட தீ குறித்து புதன்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட வீடுகளிலிருந்தும் அருகில் இருக்கும் வீடுகளிலிருந்தும் சுமார் 20 பேரை காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தறகாப்புப் படை வெளியேற்றின. காலை 6.45 மணிக்குத் தீ அணைக்கப்பட்டது.
தீ காரணமாக அருகில் இருக்கும் ஆறு டெரஸ் வீடுகளுக்கு வெவ்வேறான சேதம் ஏற்பட்டது.
புதன்கிழமை காலை எட்டு மணிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சம்பவ இடத்துக்குச் சென்றபோது ஸ்டில் ரோட்டிலிருக்கு ரம்புத்தான் ரோடு வரையிலான ஜூ சியாட் பிளேஸ் பகுதி மூடப்பட்டிருந்தது.
தீ ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய விசாரணை நடந்து வருவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

