லிட்டில் இந்தியாவில் 31 நோரிஸ் சாலையில் உள்ள கடைவீடு ஒன்றில் திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 3) தீ மூண்டது.
தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக நண்பகல் 12 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
கடைவீட்டில் தீ கொழுந்துவிட்டு எரிவதைக் காட்டும் காணொளி, Truly SG எனும் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் ஐந்து காவல்துறை அதிகாரிகள் இருப்பதைக் காணொளியில் காண முடிந்தது.
அவர்களில் சிலர் தீயணைப்புக் கருவிகளை ஏந்திக்கொண்டிருந்தனர்.
தீச்சம்பவம் காரணமாக இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.