லக்கி பிளாசாவில் தீ: மருத்துவமனையில் இருவர்

லக்கி பிளாசாவில் தீ: மருத்துவமனையில் இருவர்

1 mins read
3bd0aebc-653d-4b10-a945-8e0f23ffc24d
கட்டடத்தின் ஆறாவது மாடியிலுள்ள ஒரு பகுதியில் கரி அடுப்பில் இருந்தவை, தீப்பற்றக் காரணம் என்று கூறப்படுகிறது. - படங்கள்: ஃபேஸ்புக்

லக்கி பிளாசாவில் தீ மூண்டதை அடுத்து அங்கிருந்து 20 பேர் வெளியேற்றப்பட்டனர்.

தீச்சம்பவம் அக்டோபர் 20ஆம் தேதி நிகழ்ந்ததாகவும் அதுகுறித்து தங்களுக்குக் காலை 9.45 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைவதற்குள் மக்கள் அனைவரும் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

கட்டடத்தின் ஆறாவது மாடியிலுள்ள ஒரு பகுதியில் கரி அடுப்பில் இருந்தவை தீப்பற்றக் காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்கு முன்பே வாளிகளில் நீர் நிரப்பிப் பொதுமக்கள் தீயை அணைத்துவிட்டனர்.

இருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளில் அவசர மருத்துவ வாகனம் ஒன்றுக்கு அருகே சுமார் 10 குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் நின்றிருப்பதைக் காண முடிகிறது. லக்கி பிளாசாவின் வாசலுக்கு முன் கூட்டம் கூடுவதையும் காண முடிகிறது.

லக்கி பிளாசாவில் 2014, 2015 ஆண்டுகளில் ஏற்கெனவே தீச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்