புவன விஸ்தாவில் தற்காப்பு அமைச்சின் உத்திபூர்வ தகவல்தொடர்புத் தொழில்நுட்ப நிலையம் அமைந்துள்ள கட்டடத்தில் திங்கட்கிழமை மாலை தீப்பற்றியது.
30 சைன்ஸ் பார்க் ரோட்டில் அமைந்துள்ள அந்தக் கட்டடத்தில் தீப்பிடித்தது குறித்து மாலை 6.30 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இருப்பினும், தனது படையினர் சம்பவ இடத்துக்குச் செல்லுமுன்னரே கட்டடத்தில் இருந்த ஊழியர்கள் அங்கு இருந்த தீயணைப்புச் சாதனங்களைப் பயன்படுத்தி தீயை அணைத்துவிட்டதாகவும் அது தெரிவித்தது.
கட்டடத்தில் இருந்து பெரும்புகை எழுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் திங்கட்கிழமை பதிவேற்றப்பட்டது. சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அந்தக் காணொளி எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேல்விவரங்களை அறிய தற்காப்பு அமைச்சுடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.

