தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெம்பனிஸ் வீட்டில் தீ; 50 பேர் வெளியேற்றம்

1 mins read
28278e53-9ca6-424c-9087-b6d85afb8fd3
தீச்சம்பவத்தின் போது மின்சைக்கிள் படுக்கை அறையில் மின்னூட்டம் செய்யப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  - படம்: சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை 

தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) வீடு ஒன்றில் தீச்சம்பவம் ஏற்பட்டது. புளோக்கில் உள்ள கிட்டத்தட்ட 50 பேர் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டனர்.

தீ,மின் சைக்கிளில் உள்ள மின்கலன் மூலம் ஏற்பட்டிருக்கலாம் என்று சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை தெரிவித்தது.

தீச்சம்பவத்தின் போது மின்சைக்கிள் படுக்கை அறையில் மின்னூட்டம் செய்யப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீச்சம்பவம் டிசம்பர் 24ஆம் தேதி இரவு 9.40 மணிவாக்கில் தெம்பனிஸ் ஸ்திரீட் 91ல் உள்ள புளோக் 921ல் ஏற்பட்டது.

தகவல் கிடைத்தவுடனே தெம்பனிஸ் தீயணைப்பு நிலையத்தில் உள்ள அதிகாரிகளும் சாங்கி தீயணைப்பு நிலையத்தில் உள்ள அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக குடிமை தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

தீச்சம்பவம் புளோக்கின் முதல் தளத்தில் உள்ள வீட்டில் ஏற்பட்டது. தீயை தீயணைப்பான்கள் கொண்டு அதிகாரிகள் அனைத்தனர்.

தீச்சம்பவத்தின் போது அந்த வீட்டில் யாரும் இல்லை. புளோக்கில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் அவசர மருத்துவ உதவி வாகனத்திற்கான தேவை ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீட்டில் ஆள்கள் இல்லாத நேரத்தில் மின்சாதனப் பொருள்களை வெகு நேரம் மின்னூட்டம் செய்ய வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்