துவாஸ் ஆள்துளையில் தீ: ஊழியர்கள் இருவர் காயம்

துவாஸ் ஆள்துளையில் தீ: ஊழியர்கள் இருவர் காயம்

1 mins read
0becb473-0360-4299-898f-62192c91a293
பாதசாரிகள் நடந்துசெல்லும் பாதையில் உள்ள ஆள்துளையில் மூண்ட தீயைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் அணைத்தனர். - படம்: ‌ஷின்மின்

துவாசில் உள்ள பாதாளச் சாக்கடை ஆள்துளை ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து ஊழியர்கள் இருவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். தீச்சம்பவம் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) லையில் நிகழ்ந்தது.

ஆள்துளையின் மூடியை மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது தீப்பற்றியதாக தேசியத் தண்ணீர் அமைப்பான ‘பியுபி’ தெரிவித்தது.

இச்சம்பவம் பற்றி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தகவல் கிடைத்ததாக ‘பியுபி’யும் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

பயனியர் ரோடு, ஜாலான் புரோ சந்திப்பில் பாதசாரிகள் நடந்துசெல்லும் பாதையில் அந்த ஆள்துளை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் குடிமைத் தற்காப்புப் படையினர் தீயை அணைத்தனர்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இருவருக்கும் ‘பியுபி’யும் அதன் ஒப்பந்ததாரரும் ஆதரவளிப்பதாக பியுபி குறிப்பிட்டது.

ஒருவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டார். சிறு தீக்காயங்களுக்காக இன்னொருவருக்கு இன்னும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தீப்பற்றியதற்கான காரணத்தைக் கண்டறிய ‘பியுபி’யும் குடிமைத் தற்காப்புப் படையும் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றன.

குறிப்புச் சொற்கள்