துவாஸ் ஊழியர் தங்குவிடுதியில் தீ: எண்மர் மருத்துவமனையில்

துவாஸ் ஊழியர் தங்குவிடுதியில் தீ: எண்மர் மருத்துவமனையில்

1 mins read
இருவருக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டன
cabc5c04-b3bb-4c67-9aff-ae84fff4763b
துவாஸ் அவென்யூ 8ல் உள்ள ஊழியர் தங்குமிடத்தின் இரண்டாம் மாடியில் தீ மூண்டது. - படம்: SCREENGRAB

துவாஸ் அவென்யூ 8ல் உள்ள ஊழியர் தங்கும் விடுதி ஒன்றின் இரண்டாம் மாடியில் புதன்கிழமை (ஜூலை 8) தீ மூண்டதை அடுத்து எட்டுப் பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் இருவருக்குச் சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டன. அன்றைய தினம் காலை 11.40 மணியளவில் விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தது.

தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்ததாக எஸ்சிடிஎஃப் கூறியது. தீக்காயமுற்ற இருவர் உட்பட தீயினால் எழுந்த புகையைச் சுவாசித்ததால், சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு எண்மரை அழைத்துச் சென்றதாகவும் அது தெரிவித்தது.

தீ டூஙணடதற்கான காரணம் விசாரிக்கப்பட்டுவருகிறது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பிப்ரவரி மாதம் வெளியிட்ட ஆண்டறிக்கையின்படி, 2025ல் அதிக மக்கள் தீச்சம்பவங்களில் காயமுற்றனர். கடந்த ஆண்டு 94 பேர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டனர். 2024ல் அந்த எண்ணிக்கை 80 ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்
தீவிபத்துஊழியர்கள்தங்கும் விடுதிகாயம்பொது மருத்துவமனைசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை