சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தீமிதித் திருவிழா, மிதமான வானிலைக்கு இடையே தற்போது நடந்து வருகிறது.
காலை முதல் கிட்டத்தட்ட 40 பேர், பூக்குழியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
வெப்பமாக இருந்த பூக்குழி, பிற்பகல் 4.45 மணியளவில் மிதமடையத் தொடங்கியது.
ஆலயத்தில் பக்தர்கள் இறையின்பத்தில் நனைந்தவாறே நாள் முழுவதும் பாடல்களைப் பாடியும் கோஷங்களை முழங்கியும் வந்தனர்.
மாலை கிட்டத்தட்ட 5.20 மணிக்கு, திரெளபதி அம்மன், அர்ச்சுனர், கிருஷ்ணர், வீரபத்திரர் ஆகியோரின் உற்சவ மூர்த்தங்கள் பூக்குழிக்கு அருகே அமர்த்தப்பட்டன.
திருவிழாவுக்கான சிறப்பு விருந்தினரான கலாசார, சமூக இளையர் அமைச்சர் டேவிட் நியோ, ஆலயத் தொண்டூழியர்களுடனும் பக்தர்களுடனும் கலந்து உறவாடினார்.
தலைமைப் பண்டாரம் மாலை 6.30 மணியளவில் பூக்குழியைக் கடந்தார். பக்தகோடிகள் அவருக்கு அடுத்து குழியைக் கடந்து வருகின்றனர்.
இரவு ஒன்பது மணி வரை கிட்டத்தட்ட 4,000 பக்தர்கள் பூக்குழியைக் கடந்து செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
(தகவல்: லாவண்யா வீரராகவன், யோகிதா அன்புச்செழியன்)