ஈசூன் வீட்டில் தீ; மருத்துவமனையில் இருவர் அனுமதி

ஈசூன் வீட்டில் தீ; மருத்துவமனையில் இருவர் அனுமதி

1 mins read
24142f86-c856-4b68-9601-4c9bf6ddfdd8
ஈசூன் ஸ்திரீட் 81, புளோக் 844ல் உள்ள வீட்டின் படுக்கையறை தீயில் கருகியது. - படம்: சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை
Google News Preferred Icon

ஈசூனில் உள்ள வீடு ஒன்றில் தீ மூண்டதை அடுத்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து கிட்டத்தட்ட 28 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஈசூன் ஸ்திரீட் 81, புளோக் 844ல் ஜூன் 18ஆம் தேதி காலை 11.50 மணியளவில் தீ மூண்டது குறித்து தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது.

ஐந்தாவது மாடியில் உள்ள வீட்டின் படுக்கையறையில் தீ மூண்டதாக அதிகாரிகள் கூறினர்.

வீட்டின் வரவேற்பறையும் ஆறாவது மாடியின் வீட்டுக்கு வெளியே உள்ள குளிர்பதனப் பெட்டி கருவி ஒன்றும் தீக்கு இரையாகின.

புகையைச் சுவாசித்த ஒருவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். மற்றொருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

படுக்கையறையில் உள்ள மின்சாரச் சாதனம் தீப்பிடிக்கக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஹுய் யிங் நேரில் சென்று சந்தித்ததாகத் தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

அவர்கள் ஓய்வெடுக்க நீ சூன் சவுத் சமூக மன்றம் திறந்துவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
தீவீடுஈசூன்மருத்துவமனை