யூனோஸ் தொழிற்பேட்டை வட்டாரத்தில் தீ

1 mins read
1b15bc9f-b63d-4e91-92e8-948c5c73a4bd
யூனோஸ் அவென்யூ 7ல் உள்ள 1079 என்னும் தொழிற்கூடத்தில் தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

யூனோஸ் தொழிற்பேட்டை வட்டாரத்தில் மூண்ட தீயை அணைப்பதில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

யூனோஸ் அவென்யூ 7ல் உள்ள 1079 என்னும் தொழிற்கூடத்தில் தீப்பிடித்து எரிந்ததாக அந்தப் படை சனிக்கிழமை (நவம்பர் 1) தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

அந்தக் குறிப்பிட்ட கட்டடத்தில் உலோகம் மற்றும் கதவுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்குவதாக ‘கூகல் மேப்ஸ்’ மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.

தமது வீட்டு மாடம் வழியாக புகை தென்பட்டதாக மாலை 5.45 மணியளவில் எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

சம்பவ இடத்தை மாலை 5.50 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் அடைந்தபோது, தொழிற்கூடம் ஒன்றிலிருந்து அடர்ந்த கரும்புகை வெளியேறுவதை அவர்கள் கண்டனர்.

அங்கிருந்த ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டதையும் அவர்களால் காண முடிந்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்தில் அவசரப் பணிகளில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்