தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதற்தர குடிமக்கள், நியாயமான சிங்கப்பூர்: ஒசிபுக

2 mins read
3e7522af-08c8-4314-b984-051761c63714
ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் வேட்பாளர் சரத் குமார். - படம்: மீடியாகார்ப்

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் (ஒசிபுக) சார்பில் அதன் வேட்பாளர்களில் ஒருவரான சரத் குமார், அக்கட்சியின் அரசியல் ஒலிபரப்பில் தமிழில் பேசினார்.

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி வேட்பாளரான இவர், தனது கட்சியின் வேட்பாளர்கள் அனுபவசாலிகள் என்று கூறினார். அவர்கள் முனைவர் பட்டதாரிகள், தொழில்துறைத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் என்று அவர் குறிப்பிட்டார்.

“ஒரு மேம்பட்ட சிங்கப்பூரை உருவாக்குவது மிக மிக முக்கியம். முதல்தர குடிமக்களாக இருக்கவேண்டும் என்ற எங்களது நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

“சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீவிரமானவை. இப்பிரச்சினைகள் நமது குடும்பங்கள், நமது நல்வாழ்வு, நமது பணப்பைகள் ஆகியவற்றைப் பாதிக்கின்றன,” என்று திரு சரத் குமார் கட்சி அரசியல் ஒளிபரப்பில் சொன்னார்.

“நீங்கள் கண்ணியத்துடன் வாழ்கிறீர்களா அல்லது பற்றுச்சீட்டுகளை நம்பித்தான் வாழ்க்கையை நடத்துகிறீர்களா.

“உங்களின் பிள்ளைகள் நியாயமான வேலை வாய்ப்புகளைப் பெறுகிறார்களா அல்லது குடிமக்கள் அல்லாதவர்களிடம் அவற்றை இழக்கிறார்களா.

“நீங்கள் ஒவ்வொரு டாலரையும் பார்த்துப் பார்த்து செலவிடும்போது, கோடீஸ்வர வர்க்கம் சொகுசுக் கார்களில் பயணம் செய்கிறார்கள்,” என்று திரு சரத் குமார் விவரித்தார்.

தங்கள் வாக்காளர் சந்திப்புகளின்போது, மூத்த சிங்கப்பூரர் ஒருவர், அதிக விலைவாசி காரணத்தினால் மருந்து, மாத்திரைகளைப் பாதி அளவு மட்டும்தான் எடுப்பதாகக் கூறியதாகவும் அதேவேளை செல்வந்தர்கள் பல்லாயிரக்கணக்கான பணத்தை ஆடம்பரத்திற்குச் செலவிடுவதாகவும் அவர் சாடினார்.

“சிங்கப்பூரர்கள் சுருங்கிவரும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளை நம்பியிருக்கும் அதேவேளையில், கறுப்பு-வெள்ளை காலனித்துவ பங்ளாக்களில் அதிகாரத்தில் இருப்பவர்கள் வாழ்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா, சாதாரண குடிமக்கள் மிகவும் கடுமையான, மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய சூழலில் வாழும்போது?” என்றும் அவர் பேசினார்.

இன்று நம்மிடம் உள்ள சிங்கப்பூர், அனைத்து குடிமக்களுக்கும் நியாயமாக இருக்கிறதா - மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் தேசிய முன்னேற்றத்தை ஒன்றுகூடி அடையக்கூடியதாய் இருக்கிறதா?

இதுதான் நம் பிள்ளைகளுக்கு நாம் விரும்பும் சிங்கப்பூரா?

எம்மாற்றமும் இன்றி சூழ்நிலை மேலும் மோசமாகும்.

ஆனால் கோடீஸ்வர வர்க்கம் வாய்ப்புகளைத் தடுக்கும்போது - அது நம்மை எங்கே விடுகிறது?

ஒரு குடும்பத்தைத் தொடங்க விரும்பும் இளம் சிங்கப்பூரரை அது எங்கே விடுகிறது?

கண்ணியமாக ஓய்வுபெற விரும்பும் மூத்த சிங்கப்பூரரை எங்கே விடுகிறது?

நம்மை இவர்கள் கவனிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

நம்மை நாமே பாதுகாக்கவேண்டும்.

நம் குரல்களை நாமே ஒலிக்கச் செய்யவேண்டும்.

“இந்தத் தேர்தல் உங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது. நீங்கள் திசைகாட்டியாகச் செயல்பட ஒரு வாய்ப்பைத் தருகிறது.

“மக்களின் நலனுக்கே முன்னுரிமை தரவேண்டும், எக்கட்சியின் நலனுக்கு முன்னால்.

“ஒசிபுக உங்கள் குரல்களைக் கேட்க உறுதிகொண்டுள்ளது,” என்று கூறி அவர் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்