தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆண்டின் முதல் பெருநிலவு ஆகஸ்ட் 19ஆம் தேதி சிங்கப்பூர் வானத்தை ஒளியூட்டும்

1 mins read
a9b39eda-0656-4cad-a7db-10ab9e1a2095
கோப்புப்படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு 7 மணிக்கு இவ்வாண்டின் முதல் பெருநிலவைப் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெருநிலவின் முழுப் பொலிவையும் ஆக ஒளிமயமாக இருக்கும் காட்சியையும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிகாலை சுமார் 1.00 மணிக்குப் பார்க்க முடியும் எனவும் கூறப்பட்டது.

முழுநிலவு உலகுக்கு ஆக அருகே இருந்தபடி வலம் வந்தால் அது பெருநிலவு என்றழைக்கப்படும்.

இந்தப் பெருநிலவைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிறப்புக் கருவியும் தேவையில்லை.

சிங்கப்பூரில் மரினா அணைக்கட்டு, ஈஸ்ட் கோஸ்ட் பார்க், சவுத் (தெற்கு) ரிட்ஜ்ஸ் போன்ற பகுதிகளில் இந்தப் பெருநிலவை நாம் சிறப்பாகப் பார்க்க முடியும் என அறிவியல் மைய ஆய்வகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இடங்கள் இரவு வானத்தின் தடையற்ற, உயரமான காட்சிகளை வழங்குகின்றன என்றும் அது கூறியுள்ளது.

வானிலை சீராக இருந்தால் இந்தப் பெருநிலவை நாம் செப்டம்பர் 18ஆம் தேதி, அக்டோபர் 17ஆம் தேதி, நவம்பர் 15ஆம் தேதி ஆகிய நாள்களிலும் கண்டுகளிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்