வரி அபராதங்களைத் தவிர்க்க வீட்டு உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விதிகள்

வரி அபராதங்களைத் தவிர்க்க வீட்டு உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விதிகள்

2 mins read
337e8f4a-4840-4ea7-82b3-7e738f717082
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் கட்டடம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சொத்தில் உங்கள் பங்கின் அடிப்படையில்தான் வாடகை வருமானத்திற்கு வரி விதிக்கப்படுகிறது, எனவே குறைவான வரி செலுத்துவதற்காக இந்த விதியைத் தவறாகப் பயன்படுத்த நினைப்பதற்கு முன் நீங்கள் இருமுறை சிந்திக்க வேண்டும்.

அதிக வருமானம் ஈட்டுபவர்கள், ஓய்வுபெற்ற உறவினர் ஒருவரைச் சொத்தின் 99 விழுக்காட்டு உரிமையாளராக வைத்திருப்பது ஒரு நல்ல யோசனையாகக் கருதலாம். இதனால் தங்களின் மிகச் சிறிய பங்கின் அடிப்படையில் மட்டுமே அவர்கள் வாடகை வருமானத்தைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

அந்த ஓய்வூதியதாரருக்கு வேறு வருமானம் இல்லை என்றால், வாடகை வருமானத்தின் 99 விழுக்காட்டுக்குக் குறைந்த வரி வரம்பே பொருந்த வாய்ப்புள்ளது. இதற்கு மாறாக, அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு 20 விழுக்காடு அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் வரி விதிக்கப்படலாம்.

அவ்வாறு செய்வது வரியைச் சேமிக்க உதவினாலும், இணை உரிமையாளர் உங்களின் உரிமையை அங்கீகரிக்க மறுத்தால், நீங்கள் முழுச் சொத்தையும் இழக்க நேரிடலாம்.

முழுச் சொத்தும் உங்களுக்குத்தான் சொந்தம் என்பதை நிரூபிக்க உங்களால் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடிந்தாலும், வரியை ஏய்ப்பதற்காக ஒரு போலி ஏற்பாட்டைப் பயன்படுத்தியதற்கான மிகவும் தீவிரமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இது கடுமையான அபராதங்கள் மற்றும் சிறைத் தண்டனையையும்கூடக் கொண்டு வரும் ஒரு குற்றமாகும்.

வரி செலுத்துவதைத் தவிர்ப்பவர்களைச் சமாளிக்க சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திற்குப் பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், விதிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் செலுத்த வேண்டிய வரிகளை முறையாகச் செலுத்துவதே நல்லது.

ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் தங்கள் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு முன்பு வீட்டு உரிமையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வாடகை வருமானம் குறித்த வேறு நான்கு விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சில மாதங்களுக்கு வாடகை இல்லை

ஒரு சொத்து எப்போதும் வாடகைக்கு விடப்பட்டிருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு வீட்டு உரிமையாளரின் கனவாகும். ஆனால் உண்மையில் உங்கள் வீடு மாதக்கணக்கில் காலியாக இருக்க நேரிடலாம். காலியாக உள்ள மாதங்களுக்கு சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடமிருந்து உங்களுக்குச் சில சலுகைகள் கிடைக்குமா என்பது வீட்டு உரிமையாளரான உங்கள் நடவடிக்கைகளைப் பொறுத்தது.

அறைகளை உள்வாடகைக்கு விடுதல்

உங்கள் வீட்டில் மூன்று படுக்கையறைகள் இருந்து, அதில் ஒன்றை வாடகைக்குவிட நீங்கள் முடிவு செய்தால், அதற்கான வாடகை வருமானத்தை நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

15 விழுக்காடு கணக்கிடப்பட்ட செலவுகள்

வீட்டு உரிமையாளர்கள், ஆணையத்தின் இந்தச் சலுகையைப் பயன்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது தொடர்புடைய செலவுகள் மற்றும் சொத்து வரி ஆகியவற்றின் பதிவுகளைப் பராமரிக்கும் சிரமத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றும்.

சில சந்தர்ப்பங்களில், வங்கி வட்டி சேர்க்கப்படாத 15 விழுக்காடு கழிவின் மூலம்கூட அவர்கள் பயனடையலாம்.

அவ்வாறு செய்வது வரியைச் சேமிக்க உதவினாலும், இணை உரிமையாளர் உங்களின் உரிமையை அங்கீகரிக்க மறுத்தால், நீங்கள் முழுச் சொத்தையும் இழக்க நேரிடலாம்.

இழப்புகளைத் தெரிவிக்க வேண்டும்

அடைமான வட்டி, சொத்து வரிகள் மற்றும் பராமரிப்பு போன்ற அனைத்துத் தொடர்புடைய செலவுகளையும் அடைக்க உங்கள் வாடகை வருமானத்தைப் பயன்படுத்திய பிறகு, உங்களிடம் உபரியாகப் பணம் எதுவும் இல்லை என்றாலும், எவ்வளவு வசூலித்தீர்கள் மற்றும் எவ்வளவு செலுத்தினீர்கள் என்பதை நீங்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்