பாசிர் ரிஸ் வட்டாரத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 18) ஐந்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்து தொடர்பில் 71 வயது பேருந்து ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார்.
இரண்டு பேருந்துகள், இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி சம்பந்ததப்பட்ட அந்த விபத்து பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் நிகழ்ந்ததாக பிற்பகல் 2.30 மணியளவில் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்தில், மூன்று பேரை மீட்டு சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை கூறியது.
33 வயது பெண் பேருந்து ஓட்டுநர், 55 வயது கார் ஓட்டுநர், 47 வயது லாரி ஓட்டுநர் ஆகிய அம்மூவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவோடு இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
ஈரடுக்கு எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஒன்று, சாலைத் தடுப்பில் மோதிய பின்னர் சிவப்பு நிற கார் ஒன்றின் மீதும் மோதியதை ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில் காணமுடிந்தது.

