இயூ டீயில் திங்கட்கிழமை (டிசம்பர் 9) நேர்ந்த பல வாகனங்கள் தொடர்புடைய சாலை விபத்தில் ஐந்து வயதுச் சிறுவன் உட்பட மூவர் காயமுற்று, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
காலை 8 மணியளவில் சுவா சூ காங் ஸ்திரீட் 62ல் இரு லாரிகளும், இரு டாக்சிகளும், ஒரு காரும் மோதிய விபத்து நேர்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அச்சிறுவனுடன் காரின் 33 வயது ஓட்டுநரும் 69 வயது டாக்சி ஓட்டுநரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விபத்து தொடர்பில் மற்றொரு 69 வயது டாக்சி ஓட்டுநர் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார்.
இதன் தொடர்பில் இன்ஸ்டகிராம் ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு காணொளியில், சாலையோரம் ஐந்து வாகனங்கள் வரிசையாக நிற்பதைக் காண முடிகிறது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

