திடீர் வெள்ள அபாயம்: ரிவர்சைடு சாலையைத் தவிர்க்க வேண்டுகோள்

1 mins read
7b6e966a-821c-4b4c-9bed-c7e55e159fae
நடப்பு டிசம்பர் மாதத்தின் முற்பாதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாகச் சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால் உட்லண்ட்சிலுள்ள ரிவர்சைடு சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தேசிய நீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் புதன்கிழமை மாலை 4.20 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டது. அடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பெருமழை கொட்டலாம் என்பதால் அட்மிரல்டி சாலையை ஒட்டிய அப்பகுதியைத் தவிர்க்கும்படி அது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

முன்னதாக, பிற்பகல் 3.45 மணியிலிருந்து 5 மணிவரை சிங்கப்பூரின் பல பகுதிகளில் பெருமழை பெய்யக்கூடும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்திருந்தது.

நடப்பு டிசம்பர் மாதத்தின் முற்பாதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாகக் கடந்த 1ஆம் தேதி சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்திருந்தது.

குறிப்புச் சொற்கள்