கனமழை காரணமாக குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் உள்ள மார்கரெட் டிரைவிலும் புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள கிங்ஸ் சாலையிலும் திங்கட்கிழமை (மே 5) பிற்பகல் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பிற்பகல் 1.15 மணியிலிருந்து சுமார் 2.15 மணி வரை அவ்விடங்களைத் தவிர்க்கும்படி பொதுமக்களிடம் பொதுப் பயனீட்டுக் கழகம் அறிவுறுத்தியது.
இதுதொடர்பாக அது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது.
திங்கட்கிழமை (மே 5) பிற்பகல் 1.20 மணியிலிருந்து 2 மணி வரை சிங்கப்பூரின் தெற்கு, கிழக்கு, மத்திய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அது தெரிவித்தது.
மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், பிற்பகல் நேரத்தில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.