திடீர் வெள்ள அபாயம்: தாம்சன் ரோடு, கேலாங் பகுதிகளைத் தவிர்க்கும்படி ஆலோசனை

திடீர் வெள்ள அபாயம்: தாம்சன் ரோடு, கேலாங் பகுதிகளைத் தவிர்க்கும்படி ஆலோசனை

1 mins read
கனமழை தொடர்பில் பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரிக்கை
767ae607-48d6-4ce9-a9bc-d09ab8127c7a
தேசியச் சுற்றுப்புற வாரியம், வெள்ளிக்கிழமை (மே 8) மாலை 6 மணியளவில், சிங்கப்பூரின் பல இடங்களில் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாம்சன் ரோட்டிலும் கேலாங்கிலும் சில பகுதிகளைத் தவிர்க்கும்படிப் பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி), வெள்ளிக்கிழமை (மே 8) ஆம் தேதி மாலை பொதுமக்களுக்கு ஆலோசனை விடுத்துள்ளது.

கனமழையால் அங்குத் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால் கழகம் தனது எக்ஸ் தளப் பதிவுகளில் அவ்வாறு குறிப்பிட்டது.

மாலை 6.14 மணிக்கு வெளியிட்ட பதிவில், தாம்சன் ரோட்டில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பாலஸ்டியர் ரோடு முதல் நொவீனா ரைஸ் வரையிலான பகுதியைத் தவிர்க்கும்படி அது கேட்டுக்கொண்டது.

தொடர்ந்து, மாலை 6.26 மணியளவில் வெளியிட்ட பதிவில் கேலாங் ரோடு - கேலாங் லோரோங் 1 சாலைச் சந்திப்பை அடுத்த ஒரு மணி நேரத்திற்குத் தவிர்க்கும்படி அது அறிவுறுத்தியிருந்தது.

முன்னதாக, சிங்கப்பூரின் பல இடங்களில் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று மாலை 6 மணியளவில் தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்திருந்தது.

மே மாத முற்பாதியில், தீவின் பல்வேறு இடங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்