வெள்ள அபாயம்: அப்பர் பாய லேபார் சாலையைத் தவிர்க்க எச்சரிக்கை

1 mins read
234fc7d8-9c7c-4ec3-8a13-a95f61466099
நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பிற்பகல் நேரத்தில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அப்பர் பாய லேபார் சாலைக்குச் செல்லத் திட்டமிடுபவர்கள்,  திடீர் வெள்ள அபாயம் காரணமாக அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு பொதுப் பயனீட்டுக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) பிற்பகல் 3.13 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு அப்பர் பாய லேபார் சாலையைத் தவிர்ப்பது சிறந்தது என்று கழகம், எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

சிங்கப்பூரின் தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை கனமழை எதிர்பார்க்கப்படுவதாகவும் கழகம் மற்றொரு பதிவில் குறிப்பிட்டது.

சிங்கப்பூர் வானிலை ஆய்வுத் துறை அக்டோபர் 31 அன்று வெளியிட்ட அறிவிப்பில், நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பிற்பகல் நேரத்தில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மழை சில நாள்களில் மாலை நேரத்திலும் நீடிக்கலாம். சுமத்ரா ஸ்குவால்ஸ் (Sumatra squalls) எனப்படும் திடீர் சூறாவளி. ஒருசில நாள்களில் காலையில் பரவலான இடியுடன் கூடிய மழையையும், பலத்த காற்றையும் கொண்டு வரலாம்.

நவம்பர் முதல் இரண்டு வாரங்களுக்கான மொத்த மழைப்பொழிவு தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விடக் குறைவாகவே இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்