கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் சில இடங்களைத் தவிர்க்குமாறு பியூபி தெரிவித்துள்ளது.
ஜாலான் சீவியூவுக்கு (Jalan Seaview) இட்டுச் செல்லும் மவுண்ட்பேட்டன் ரோடு, பிடோக் வட்டாரத்தில் உள்ள ஜாலான் பொக்கோக் செருனய் (Jalan Pokok Serunai) ஆகிய இரு வழிகளிலும் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அது செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) காலை 8 மணியளவில் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டது.
முன்னதாக, பியூவி வெளியிட்டிருந்த பதிவில் காலை 7.20 மணி முதல் 8.30 மணி வரை சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியிருந்தது.

