தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிகாரியின் செவிப்பொறியைத் திருடிய முன்னாள் தேசிய சேவையாளருக்குச் சிறை

1 mins read
48b12133-6947-4da6-9450-344879a858a2
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் காவல்படையைச் சேர்ந்த முன்னாள் முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர், பணியில் இருந்தபோது தனது மூத்த அதிகாரியின் 300 வெள்ளி மதிப்புள்ள ‘ஏர்பாட்ஸ்’ செவிப்பொறியைத் திருடியிருக்கிறார்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய சேவையை முடித்த 24 வயது முகம்மது சியாஃபிக் ஸ்ரேயாண்டி முகம்மது ஃபைஸால், திருடியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 28) அவருக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பின்போது திருடியதாக இரண்டாவது குற்றச்சாட்டும் கருத்தில்கொள்ளப்பட்டது.

‘புரொட்டெக்டிவ் செக்கியூரிட்டி கொமாண்ட் பேஸ்’ தளத்தின் ஆதரவு, தொழில்நுட்பப் பிரிவில் உதவியாளராகப் பணியாற்றியபோது சியாஃபிக், கார்ப்பரல் பதவி வகித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதியன்று, நிலையத்தின் 37 வயது இன்ஸ்பெக்டருக்குச் சொந்தமான ‘ஏர்பாட்ஸ்’ செவிப்பொறியைக் கண்ணுற்றார்.

இன்ஸ்பெக்டர் வெளியே சென்றிருந்தபோது மாலை ஆறு மணியளவில் அந்த செவிப்பொறியைத் திருடினார். பிறகு இன்ஸ்பெக்டர், அந்த ‘ஏர்பாட்ஸ்’ செவிப்பொறியை அடையாளம் காணும் ‘டிராக்கிங்’ முறையைக் கொண்டு கண்டுபிடித்தார்.

குறிப்புச் சொற்கள்