முன்னாள் என்யுஎஸ் சட்டப் பிரிவுத் தலைவர் காலமானார்

1 mins read
18d72a6d-fe15-46af-9fce-277eeddb8139
தியோ சூ மியென். - கோப்புப்படம்: நியூ பேப்பர்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) முன்னாள் சட்டப் பிரிவுத் தலைவரான (டீன்) தியோ சூ மியென் திங்கட்கிழமை (ஜூன் 30) காலை காலமானார்; அவருக்கு வயது 86.

டாக்டர் தியோ, என்யுஎஸ் சட்டப் பிரிவு ‘டீன்’ பதவியை வகித்த முதல் பெண்மணியாவார். அப்பொறுப்பை வகித்த ஆக இளையவர் என்ற பெருமையையும் கொண்டிருந்தார்.

தமது 30வது வயதில் 1969ஆம் ஆண்டு என்யுஎஸ் சட்டப் பிரிவு டீனாகப் பொறுப்பேற்ற டாக்டர் தியோ 1971ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பை வகித்தார். அவர், 1998ஆம் ஆண்டு திருவாட்டி டான் பீ லியெனுடன் சேர்ந்து உள்ளுர் சட்ட நிறுவனமான டிஎஸ்அம்பி லா கார்ப்பரே‌ஷனைத் (TSMP Law Corporation) தொடங்கினார்.

திருவாட்டி தியோ, ஒலிம்பிக் வீரரரும் சொத்துச் சந்தை தொழிலதிபருமான தியோ கிம் ஹோக்கை மணமுடித்தார். திரு தியோ, 2020ஆம் ஆண்டு தமது 82வது வயதில் காலமானார்.

அத்தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். முன்னாள் சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தியோ ‌ஷென் யி, முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் தியோ லி-ஆன் ஆகியோர் அந்த மூவரில் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்