தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடிக்காரருக்கு தகவல் வழங்கிய முன்னாள் யுஓபி ஊழியர்

1 mins read
4b52459f-af19-46a9-a83e-c33163d35e2d
குற்றவாளியான சாவ் வென்ஜிங். - படம்: ‌ஷின் மின்

முன்னாள் யுஓபி வங்கி ஊழியர் ஒருவர், மோசடிக்காரருக்கு 1,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தகவல்களை வழங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது சுமத்தப்பட்டிருந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) நிரூபிக்கப்பட்டன.

குற்றவாளியான சாவ் வென்ஜிங், 30, மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. அவர் மீது கணினியின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின்கீழ் 14 குற்றச்சாட்டுகளும் வங்கிச் சட்டத்தின்கீழ் 13 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன.

சீனாவைச் சேர்ந்த அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. வழக்கறிஞர் காளிதாஸ் முருகையன் அவரைப் பிரதிநிதித்து வாதிட்டார்.

குற்றங்களைப் புரிந்தபோது சாவ், யுஓபியின் சொத்து அடகுப் பிரிவில் இளைய அதிகாரியாகப் பணியாற்றி வந்தார் என்று நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2021ஆம் அண்டு மார்ச் மாதம் சீனாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளைப் போல் நடித்த இருவர் சாவ்வைத் தொடர்புகொண்டனர். சாவ், வங்கியின் தரவுத் தளத்தில் இருந்த சீன நாட்டவரின் தகவல்களை அவர்களின் கோரிக்கைக்கேற்ப வழங்கினார்.

வங்கியின் தரவுத் தளத்தை வேலைக்காக மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்பது சாவ்வுக்குத் தெரிந்திருந்தது என நிதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சாவ் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்தார். அதே நாள் அவர் கைது செய்யப்பட்டார்.

வரும் டிசம்பர் மாதம் சாவ்வுக்குத் தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்