‘மற்றும் குழுவினர்’ அமைப்பின் நான்காவது மாதாந்தரக் கூடுகை செப்டம்பர் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குச் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெறவிருக்கிறது.
அதில் எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ‘பணத்தின் குழந்தைகள்’ சிறுகதை, கவிதைகள், பாடல்கள் பற்றிய உரையாடல் அங்கம் இடம்பெறும்.
கடந்த மாதம் இடம்பெற்ற ‘மற்றும் குழுவினர்’ அமைப்பின் மூன்றாவது கூட்டத்தில் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் எழுதிய ‘ஆகுதி’ சிறுகதையின் கதைக்களம், மொழி, கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து வாசகர்கள் கலந்துரையாடினர்.
இறுதியாகக் கவிஞர் இசை எழுதிய ‘உடைந்து எழும் நறுமணம்’, கவிஞர் நிர்மலா கர்க் (தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன்) எழுதிய ‘ஃபேர் அண்ட் லவ்லி’, கவிஞர் எஸ். வைதீஸ்வரன் எழுதிய ‘காத்திருப்பு’ ஆகிய கவிதைகள் வாசிக்கப்பட்டன.
மேல் விவரங்களுக்கு: மதிக்குமார் தாயுமானவன் - 93264096, யாழிசை மணிவண்ணன் - 83575294.

