உட்லண்ட்ஸ் பேரங்காடி ஒன்றிலுள்ள தானியக்கக் கட்டண வசதியை முறைகேடாகப் பயன்படுத்தி 500 வெள்ளி பெறுமானமுள்ள மளிகைப் பொருள்களை ஏமாற்றிப் பெற்றதன் தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 82ல் உள்ள கடை ஒன்றில் திருட்டுச் சம்பவம் நடந்த சந்தேகத்தின் பேரில் உதவிக்கான அழைப்பைப் பெற்றதாகக் காவல்துறையினர் புதன்கிழமை (ஜூலை 16) தெரிவித்தனர்.
சந்தேக நபர், மோசடி செய்துகொண்டிருந்ததைக் கண்ட பேரங்காடி ஊழியர்கள், அவரைத் தடுத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 1க்கும் மார்ச் 21க்கும் இடையே அந்த ஆடவர், பேரங்காடியில் இதுபோல 26 மோசடிக் கட்டணங்களைச் செய்ததாகத் தெரியவந்தது.
வியாழக்கிழமை (ஜூலை 17) அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட இருந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குப் பத்தாண்டு சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.