மோசடிக் கடிதம் மூலம் நிதி திரட்டும் முயற்சி: எச்சரிக்கும் என்சிஎஸ்எஸ்

2 mins read
a3853aca-b77b-4d95-a43a-2ed92fe1048a
என்சிஎஸ்எஸ் மோசடிக் கடிதம் குறித்து ஃபேஸ்புக் பதிவில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) எச்சரிக்கை விடுத்திருந்தது. - படம்: : என்சிஎஸ்எஸ் / ஃபேஸ்புக்

இணைய மோசடிக்காரர்கள் தேசியச் சமூகச் சேவை மன்றத்தின் (என்சிஎஸ்எஸ்) சின்னத்தைப் பயன்படுத்திப் போலிக் கடிதத்தின் மூலம் நிதி திரட்ட முயல்கின்றனர்.

மன்றம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் அதனைத் தெரிவித்தது.

மன்றத்தின் திட்டத்திற்கு மக்கள் நன்கொடை அளிக்கலாம் என்றும் அதன் மூலம் கழிவுகள் கிடைக்கும் என்றும் குறிப்பிட்ட மோசடிக் கடிதம் பற்றித் தனக்குத் தெரியவந்ததாக அது கூறியது.

அதுகுறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாக என்சிஎஸ்எஸ் கூறியது. விசாரணை நடைபெறுகிறது.

நிதி திரட்டும் முயற்சி குறித்த தகவல்கள் உண்மையானவையா என்பதைப் பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும் என்று அது எச்சரித்தது.

மன்றத்தின் ஃபேஸ்புக் பதிவில் அதன் சின்னத்துடன் கூடிய கடிதத்தின் நிழற்படமும் இடம்பெற்றிருந்தது. உதவி தேவைப்படுகின்ற தனிமனிதர்களுக்கும் சமூகத்தினருக்கும் ஆதரவளிக்கவும் அவர்களைத் தூக்கிவிடவும் கடப்பாடு கொண்டிருப்பதாகப் போலிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நிதிப் பரிவர்த்தனைகள் அனைத்தும் கிவிங்.எஸ்ஜியின் (Giving.sg) நன்கொடைத் தளம், சமூக உண்டியலின் இணையத்தளம் அல்லது சமூகச் சேவை நிலையத்தின் இணையத்தளம் ஆகியவற்றின் மூலமே மேற்கொள்ளப்படுவதாக ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்ட மன்றத்தின் அறிக்கை தெரிவித்தது.

சமூக உண்டியல் நிதி திரட்டு, மக்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகளிலும் சமூக சேவைப் பயிற்சிக் கழகம் ட்டிலும் கவனம் செலுத்துகின்றன.

பணத்தை மாற்றும்படியோ கடன்பற்று அட்டைத் தகவல்களைத் தரும்படியோ வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது ஒரே முறை பயன்படுத்தும் மறைச்சொல்லைக் கொடுக்கும்படியோ பொதுமக்களை ஒருபோதும் மன்றம் கேட்காது என்று அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்