தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘டிமென்ஷியா சிங்கப்பூர்‘ வழங்கும் புதிய செயலி

1 mins read
a026ef20-2196-4960-9b3d-010cf92d9e75
துடிப்புடன் இருப்பதற்கு அன்றாட வாசிப்பை ஊக்குவிக்க, ‘டிமென்ஷியா சிங்கப்பூர்‘, ‘எஸ்பிஎச் மீடியா’வுடன் இணைந்து செயல்படுகிறது. - படம்: ‘‘டிமென்ஷியா சிங்கப்பூர்‘ 

மறதிநோய் உள்ளவர்களும் அவர்களின் பராமரிப்பாளர்களும் புதிய செயலி ஒன்றுக்கு விண்ணப்பிக்கும்போது, ‘எஸ்பிஎச்’ மின்னிலக்கப் பதிப்புகளை இலவசமாகப் பெறலாம்.

‘டிமென்ஷியா சிங்கப்பூர்‘ சமூக சேவை அமைப்புக்கும், ‘எஸ்பிஎச் மீடியா’வுக்கும் இடையிலான பங்காளித்துவத்தின் மூலம் இது சாத்தியமாகிறது.

ஜூன் 15ஆம் தேதியிலிருந்து, ‘காரா’ செயலிக்கு விண்ணிப்பிக்கும் முதல் 1,000 பேர், ‘எஸ்பிஎச்’ நிறுவனத்தின் மின்னிலக்க நாளிதழ்களில் ஒன்றை, ஓராண்டுக்கு இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’, ‘ஷின்மின்’, ‘லியான்ஹ சாவ்பாவ்’, ‘பெரிட்டா ஹரியான்’, ‘தமிழ் முரசு’ ஆகியவையே அவை.

தேர்ந்தெடுக்கப்படும் நாளிதழின் இணையத்தளத்திலும், கைப்பேசிச் செயலியிலும் உள்ள அனைத்துச் செய்திகளும் அவற்றில் அடங்கும்.

‘காரா’ என்பது ‘டிமென்ஷியா சிங்கப்பூர்‘ அமைப்பு வழங்கும் இலவசக் கைப்பேசிச் செயலியாகும்.

மறதிநோயால் பாதிக்கப்படுவோரைக் கவனிப்பது தொடர்பான வளங்களையும் ஆதரவையும் வழங்க, பராமரிப்பாளர்களையும், மறதிநோயால் பாதிக்கப்படுவோரையும் இணைக்கும் ஒரு செயலி அது.

‘டிமென்ஷியா சிங்கப்பூர்‘ அமைப்புடனான இந்தக் கூட்டு முயற்சி, மறதிநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, ‘எஸ்பிஎச் மீடியா’வின் ஆதரவை கோடிகாட்டுகிறது.

“சிங்கப்பூரில் அனைவரையும் உள்ளடக்கும், ஆதரவு உள்ள சமுதாயத்தைப் பேணிவளர்க்க, இந்த அர்த்தமுள்ள பயணத்தில் ‘டிமென்ஷியா சிங்கப்பூர்‘ அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் எங்களுக்குப் பெருமை,” என்று ‘எஸ்பிஎச் மீடியா’வின் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி யுனிஸ் ஷென் கூறினார்.

குறிப்புச் சொற்கள்