‘இசிஓ’ நிறுவனத்தை $605 மில்லியனுக்கு வாங்கவுள்ள பிரெஞ்சு நிறுவனம்

‘இசிஓ’ நிறுவனத்தை $605 மில்லியனுக்கு வாங்கவுள்ள பிரெஞ்சு நிறுவனம்

1 mins read
15d0ac12-d534-4d62-9ff7-c8fc3bc651a5
‘இசிஓ’ நிறுவனம் ஆபத்தான கழிவுகளை நிர்வாகம் செய்யும் பணிகளில் ஈடுபடுகிறது. - படம்: கூகள் வரைப்படம்

பிரெஞ்சு நிறுவனமான ‘சே‌ஷ் என்விரான்மென்ட்’ சிங்கப்பூரின் ‘இசிஓ இன்டஸ்ட்ரியல் என்வைரடென்டல் என்ஜினியரிங் நிறுவனத்தை கிட்டத்தட்ட 605 மில்லியன் வெள்ளிக்கு வாங்கவுள்ளது.

அந்தத் தகவலை ‘சே‌ஷ்’ நிறுவனம் ஜூன் 17ஆம் தேதி அறிக்கை மூலம் வெளியிட்டது.

‘இசிஓ’ நிறுவனம் அபாயகரமான கழிவுகள் சார்ந்த பணிகளில் ஈடுபடுகிறது. அந்த நிறுவனத்தை பெய்ஜிங் கேப்பிடல் நிறுவனம் வைத்திருந்தது. தற்போது அதனிடம் இருந்து ‘சே‌ஷ்’ நிறுவனம் வாங்குகிறது.

‘இசிஓ’ நிறுவனத்தின் விற்பனை குறித்து கடந்த ஜூன் மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. ஒரு சில நிறுவனங்கள் ‘இசிஓ’வை வாங்க முயற்சி செய்வதாகவும் அது குறிப்பிட்டது.

‘இசிஓ’ நிறுவனத்தின் மூலம் ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் தங்களது வர்த்தக வளர்ச்சிக்கு நல்ல அடித்தளம் அமையும் என்று ‘சே‌ஷ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேக்சிம் சே‌ஷ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ‘இசிஓ’ நிறுவனம் 96 மில்லியன் வெள்ளி மதிப்பிலான விற்பனைகளை மேற்கொண்டது.

குறிப்புச் சொற்கள்