தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் பிரெஞ்சு அதிபர் மெக்ரோன்

1 mins read
0678f999-8f3b-4e8e-8420-e74b0986731e
பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் சிங்கப்பூரில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (மே 29, 30ல்) நடைபெறும் ஷங்ரிலா மாநாட்டில் கலந்துகொண்டு முக்கிய உரை நிகழ்த்துவார் என்று கூறப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள பிரெஞ்சு அதிபர் மெக்ரோன், தற்காப்பு, பாதுகாப்பு, சட்டம், செயற்கை நுண்ணறிவு, போக்குவரத்து ஆகிய துறைகளில் ஒத்துழைக்கும் உடன்பாடுகளில் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.

திரு மெக்ரோன் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் (மே 29, 30ல்) சிங்கப்பூரில் இருப்பார். இதில் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமையில் திரு மெக்ரோன் ஷங்ரிலா மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்துவார். இதன்மூலம் இந்த மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தும் முதல் ஐரோப்பிய நாட்டுத் தலைவராக விளங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு மெக்ரோனின் இந்த அதிகாரத்துவ பயணம் சிங்கப்பூர், பிரான்சுக்கு இடையிலான 60 ஆண்டுகால அரசதந்திர உறவைச் சிறப்பிக்கும் விதமாக அமையும் என்று வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திரு மெக்ரோனின் சிங்கப்பூர் பயணம் தென்கிழக்கு ஆசியாவுக்கு அவர் மேற்கொண்டுள்ள பயணத்தின் மூன்றாம் கட்டம் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர் இந்தோனீசியாவில் இருந்து சிங்கப்பூர் வருகிறார்.

இந்தோனீசியாவில் திரு மெக்ரோன் முதல்கட்ட தற்காப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அது இந்தோனீசியா, பிரெஞ்சு ராணுவத் தளவாடங்களை வாங்க வழிவகுக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதற்கு முன்னர் அவர் வியட்னாம் சென்றிருந்தார். அது வியட்னாம், பிரான்சின் ஏர்பஸ் விமானங்களுக்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்