ஃபுல்லர்ட்டன் பிரசாரக் கூட்டம்: பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அறிவுரை

ஃபுல்லர்ட்டன் பிரசாரக் கூட்டம்: பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அறிவுரை

1 mins read
7e9f147e-e827-4f5c-b0c3-da5bb0f47b79
ஏப்ரல் 28 நடைபெறும் பிரசாரக் கூட்டங்களில் பிற்பகல் நடைபெறும் ஃபுல்லர்ட்டன் கூட்டமும் ஒன்று. - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இன்று நண்பகல் 12 மணிக்கு ஃபுல்லர்ட்டனில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தி அங்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

அப்பகுதியில் சாலைகள் மூடப்பட்டிருக்கலாம், வாகனப் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருக்கலாம். அதனால் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அப்பகுதியில் திரளும் கூட்டம் பற்றிய உடனடித் தகவல்கள் உள்ளிட்டவற்றை Crowd@UOBPlazaவில் தெரிந்துகொள்ளலாம் என்றும் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்