தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனிதத் திறனை செயற்கை நுண்ணறிவு விஞ்சாத எதிர்காலம்

2 mins read
26b80f92-2990-44ec-9a37-6fb668295b73
சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவர் டான் ஹீ டெக். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மனிதத் திறன்களை செயற்கை நுண்ணறிவு மிஞ்சிவிடாமல் எதிர்காலத்துக்குத் தயாராக மனிதவளத்தை மேம்படுத்தவேண்டும் என்று சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவர் டான் ஹீ டெக் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் ஊழியர் அணியைச் சீரமைக்கும் பணியில் அரசாங்கம், தொழிலாளர் அமைப்புகள், முதலாளிகள் ஆகியோர் சிலநேரங்களில் ஆணித்தரமாக கருத்துவேறுபாடுகளைப் பரிமாறிக்கொண்டுள்ளனர் எனவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுடன் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) நடந்த நேர்காணலில் அவர் பகிர்ந்துகொண்டார்.

திரைமறைவில் நடக்கும் மிகவும் கடுமையான பேச்சுவார்த்தைகள் தொழிலாளர்களின் தேவைகளையும் முதலாளிகளின் நலன்களையும் சரிசமமாக வைத்து நடத்தப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

செயற்கை நுண்ணறிவுத் திறனை அவசரமாக நிறுவனங்கள் செயல்படுத்துவதைப் பற்றி அவர் எச்சரித்தார். “சிங்கப்பூர் தொழிலாளர்களின் திறன்களை அது குறைத்து மதிப்பிட்டுவிடும். மேலும் ஆரம்ப நிலையில் வேலையில் அமர்த்தப்படுவோரையும் எதிர்காலத்துக்கான தொழிலாளர்களைத் தயார்ப்படுத்துவதையும் அச்செயல் பாதிக்கும்,” என்றார் திரு டான்.

நிபுணத்துவமான மனிதவள மேம்பாடு, திறன்களை வளர்த்து அவை சார்ந்த நீண்டநாள் வேலைகளில் அமர்த்துதல், வெளிநாடுகளில் பணியாற்றுதல் போன்ற சவால்களில் முதலாளிகளுக்கு உதவி வழங்க சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு விழைகிறது என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி நடந்த என்டியுசி என்டர்பிரைசின் பொதுக் கூட்டத்தில் அதன் தலைவர் திரு லிம் பூன் ஹெங் பதவி விலகுவதாக அறிவித்தார். அந்த அமைப்பின் புதிய தலைவராகத் திரு டான் ஹீ டெக் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்