தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதலில் இருந்தே ஆரம்பம், ஒவ்வொரு வாக்காக பெறப் போராட்டம்: ஜோசஃபின் டியோ

2 mins read
d98050a6-1e6d-4bd1-b00e-de4b8fe18d55
மக்கள் செயல் கட்சி புதுமுகம் ஷான் லோ, மின்னிலக்க மேம்பாடு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, டாக்டர் வான் ரிசால் வான் சக்காரியா, திருவாட்டி டென்னிஸ் புவா ஆகியோர் சிம்ஸ் விஸ்தா ஈரச்சந்தை, உணவங்காடி நிலையத்தில் வெள்ளிக்கிழமை தொகுதி உலா மேற்கொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜாலான் புசார் குழுத்தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் குழு கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்றிருப்பது ஒருபுறம் இருக்கட்டும். அதற்காக அது தற்போது மே மாதம் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் வெற்றி நமதே என்ற மனப்பான்மையுடன் களமிறங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒவ்வொரு தேர்தலையும் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம். இதுவரை குடியிருப்பாளர்களுக்கு எங்களால் எப்படி செயல்பட முடிந்தது என்பதை நினைவுகூர மட்டுமே சென்ற தேர்தல்கள் பற்றி நம்மால் சிந்தித்துப் பார்க்க முடியும்,” என்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20ஆம் தேதி) தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.

ஜாலான் புசார் குழுத்தொகுதியின் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் குழுவுக்கு திருமதி டியோ இந்தத் தேர்தலிலும் தலைமை தாங்குகிறார். வாக்காளர்கள் வேட்பாளர்களை அவர்களின் தகுதிக்கு ஏற்ப எடைபோட்டு, அவர்கள் இதுவரை எப்படி செயல்பட்டுள்ளார்கள் என்பதைப் பார்த்து, அவர்கள் தொகுதிக்கு என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளனர் என்பதை ஆராயலாம் என்று அவர் தெரிவித்தார்.

“கடந்த தேர்தல் முடிவுகளை வரலாறாகவே எப்பொழுதும் நாங்கள் பார்ப்பதுண்டு. வருங்காலத்தைப் பற்றி எண்ணும்போது அது நம் கைவசம்தான் உள்ளது என்ற மனப்பான்மையில் நாங்கள் இருப்பதில்லை.

“ஒவ்வொரு தேர்தலிலும் முதல் வாக்கிலிருந்து ஒவ்வொரு வாக்குக்காக போராடிப் பெறுவது என்ற அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம். அப்படிப் பார்க்கும்பொழுது ஒன்றும் இல்லை என்ற நிலையிலிருந்து ஆரம்பித்து அதிலிருந்து ஒவ்வொரு வாக்காகப் பெறுவோம்,” என்று பெண்டிமியர் தொடக்கப் பள்ளி அருகே உள்ள கோளம் ஆயர் பாலத்தில் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலில் விளக்கினார்

ஜாலான் புசார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக் குழு 2020ஆம் ஆண்டுத் தேர்தலில் 65.37 விழுக்காடு வாக்குகள் பெற்றது. அதற்கு முந்தைய 2015ஆம் ஆண்டு தேர்தலில், அப்போதைய அமைச்சர் டாக்டர் யாக்கோப் இப்ராகிம் தலைமையில் போட்டியிட்ட குழு 67.7 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்