தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுப் பொலிவு பெறும் கோல்டன் மைல் காம்பிளெக்ஸ் கட்டட வடிவமைப்புக் கலை மையமாகத் திகழும்

2 mins read
95d67fcf-5379-449b-a52f-c1af951ee263
ஓவியரின் கைவண்ணத்தில் கோல்டன் மைல் காம்பிளெக்ஸ். - படம்: ஃபார் ஈஸ்ட் ஆர்கனைசேஷன்

கோல்டன் மைல் காம்பிளெக்ஸ் கட்டடம் புதுப் பொலிவு பெற உள்ளது.

அதைப் புதுப்பிக்கும் பணிகள் 2029ஆம் ஆண்டுவாக்கில் முடிவுறும்போது அது, அந்தக் கட்டடத்துக்கே உரிய தனித்தன்மையுடன் விளங்கும் மேற்கூரையுடன் கூடிய அகண்ட தரைத்தளத்துடன், காட்சி தரும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்தக் கட்டடத்தில் அகண்ட தரைத்தளம் இருப்பதே அது பராமரிக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. அத்துடன், அந்தக் கட்டடத்துக்கு உறுதுணையாக விளங்கும் வண்ணம் அங்கு 45 மாடிகள் கொண்ட ஒரு புதிய குடியிருப்புக் கட்டடத்தை கட்ட முடிவெடுக்கப்பட்டதாக இதில் தொடர்புடைய வடிவமைப்புக் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

கோல்டன் மைல் காம்பிளெக்ஸ் கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டுள்ள ஃபார் ஈஸ்ட் ஆர்கனைசேஷன், பெரினியல் ஹோல்டிங்ஸ் அடங்கிய சொத்து மேம்பாட்டுக் குழுமம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10ஆம் தேதி) இந்தக் கட்டடத்தைப் புதுப்பிக்கும் திட்டத்தை அறிவித்தன. அந்தக் குழுமம் இம்மாத பிற்பகுதியில் கோல்டன் மைல் காம்பிளெக்சில் வரவுள்ள அலுவலகங்கள், மருந்தகங்களை விற்பனைக்கு விடும் முன்பாக கட்டடத்தின் மேம்பாட்டுப் பணிகளை தற்பொழுது அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பராமரிக்கப்படும் முதல் பெரிய அடுக்குமாடிக் கட்டடமாக கோல்டன் மைல் காம்பிளெக்ஸ் கட்டடம் விளங்கவுள்ளது. அந்தக் கட்டடத்தை பராமரிக்கப்பட வேண்டிய கட்டடமாக முடிவெடுக்கப்பட்டபோது அதை வர்த்தகங்களுக்கு பயன்படும் விதமாக புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்டது. அதற்கே உரிய தனித்துவத்தை பராமரிக்கும் விதமாக அதற்கு பல ஊக்குவிப்புச் சலுகைகள் வழங்கப்பட்டன.

ஒரு நவீன, பெரிய கட்டடத்தை உணர்வுப்பூர்மாகவும் லாப ஈவு தரும் வகையிலும் எவ்வாறு புதுப்பிக்க முடியும் என்பதற்குச் சான்றாக விளங்கக்கூடிய இந்தப் புதுப்பிப்புப் பணியானது பல சுற்றுச்சூழல் நிபுணர்களால் கூர்ந்து கவனிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதில் குறிப்பிடும்படியான ஒரு ஊக்குவிப்புச் சலுகை என்னவெனில், இதன் மொத்த தரை அளவு விரிவாக்கம் கண்டுள்ளது. இதனால், கோல்டன் மைல் காம்பிளெக்ஸ் கட்டடத்துக்கு அருகிலேயே 30 மாடிகள் கொண்ட ஒரு குடியிருப்புக் கட்டடத்தைக் கோல்டன் மைல் காம்பிளெக்ஸ் எழுப்பலாம் என்று முன்னர் நகர மறு சீரமைப்பு ஆணையம் தெரிவித்திருந்தது.

அத்துடன், அந்த சொத்து மேம்பாட்டுக் குழுமம் அருகிலிருக்கும் அரசு நிலத்தையும் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இது கோல்டன் மைல் காம்பிளெக்சின் கட்டட எல்லைப் பகுதியை அதிகரிக்க உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்