தெம்பனிஸ் செஞ்சுரி ஸ்குவேர் கடைத்தொகுதியில் பிப்ரவரி 10ஆம் தேதி கோல்டன் வில்லேஜ் (GV) குழுமம் தனது 18வது திரையரங்கைத் திறக்கவிருக்கிறது.
அது, தெம்பனிஸ் கடைத்தொகுதியிலுள்ள ஜிவி சினிமாவிற்கு அருகே அமைந்துள்ளது.
செஞ்சுரி ஸ்குவேர் கடைத்தொகுதியின் ஐந்தாம் தளத்தில் அந்தத் திரையரங்கு அமையவுள்ளது. முன்னர் அவ்விடத்தில் கெத்தே சினிபிளெக்சஸ் செயல்பட்டு வந்தது.
விவோசிட்டி, பூகிஸ்+, ஃபூனன், சன்டெக் சிட்டி உள்ளிட்ட இடங்களிலும் ஜிவி திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன.
முன்னதாக, காஸ்வே பாயின்ட், டௌன்டவுன் ஈஸ்ட், செஞ்சுரி ஸ்குவேர், 321 கிளமென்டி ஆகிய இடங்களில் இருந்த திரையரங்குகளை மூடிய கெத்தே சினிபிளெக்சஸ், 2025 செப்டம்பர் மாதத்துடன் அதிகாரத்துவமாகத் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது.
அதையடுத்து, டௌன்டவுன் ஈஸ்ட்டில் கெத்தே சினிபிளெக்ஸ் இருந்த இடத்தை 2025 நவம்பரில் ஜீவி பிடித்துக்கொண்டது. காஸ்வே பாயின்டில் கெத்தே விட்டுச்சென்ற இடத்தில் எஸ்ஏஎஸ் சினிபிளெக்ஸ் செயல்படத் தொடங்கியது.
ஜிவி திரையரங்குகளில் திரையிடப்படும் படங்கள், அவற்றுக்கான சலுகைகள் குறித்த விவரங்களை www.gv.com.sg என்ற இணையத்தளத்திலும் @gvmovieclub என்ற ‘ஹேஷ்டேக்’ வழியாக சமூக ஊடகத் தளங்களிலும் காணலாம்.

